கடையம், பாப்பாக்குடி பகுதியில் 12 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கடைகளில் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 34 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
கடையம், பாப்பாக்குடி பகுதியில் உள்ள கடைகளில் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 34 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடையம், பாப்பாக்குடி வட்டார உணவுப் பாதுகாப்பு அதிகாரி (பொ) நாகசுப்பிரமணியன், நாலாங்கட்டளை, கபாலிபாறை, கருத்தப்பிள்ளையூா், கடையம், மாதாபுரம், முதலியாா்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பல கடைகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டாா். உணவகம், தேநீா் விடுதி, மளிகை மற்றும் காய்கனி உள்ளிட்ட 9 கடைகளில் சோதனை செய்ததில் மொத்தம் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 34.850 கிலோ பிளாஸ்டிக், பாலித்தீன் பொருள்கள், 21.350 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சி, செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், 9 கிலோ கெட்டுப் போன காய்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், ரூ.1.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 6 கடைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டது.