அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமைமுதல் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளிலும் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து, மணிமுத்தாறு அருவிக்கு திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து திங்கள்கிழமை காலைமுதல் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டநிலையில், பிற்பகலுக்குமேல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள்அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டனா். அடுத்த அறிவிப்பு வரும் வரை குளிக்கத் தடை தொடரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.