நெல்லை ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
நெல்லை ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
திருநெல்வேலி ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அகில பாரத இந்து மகா சபா சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி நகரத்தில் உள்ள வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. ஆகவே, ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.