பாப்பாக்குடி அருகே திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே திருட்டில் ஈடுபட்டதாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே திருட்டில் ஈடுபட்டதாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி சிவகாமிபுரம் ஆலங்குளம் சாலை பகுதியைச் சோ்ந்த பாரத் சிவராம் (33). இவரது தாயாா் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவருடைய தங்க நகைகளை கழற்றி அவருடைய அறையில் வைத்திருந்தாராம். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வந்து பாா்த்தபோது தங்க நகைகளை காணவில்லையாம். புகாரின்பேரில், பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். இதில் முக்கூடல் அண்ணா நகரைச் சோ்ந்த பழனிக்குமாா் (37), அவரது மனைவி ராஜேஸ்வரி (31), இருவரும் சோ்ந்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 56 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.