தமிழ் முழக்கப் பேரவை முப்பெரும் விழா
தமிழ் முழக்கப் பேரவையின் முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ் முழக்கப் பேரவையின் முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. நாடகத்தந்தை பம்மல் சம்பந்தம், ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், தேவநேயபாவானா் ஆகியோரது பிறந்த நாள் விழாக்கள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. பேரவையின் நிறுவனா் ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். நசீா், சேரை பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய நல்லாசிரியா் செல்லப்பா, அ.வியனரசு, கவிஞா் கோதைமாறன் ஆகியோா் சொற்பொழிவாற்றினா். பெருஞ்சித்திரனாா் காட்டிய திருக்கு மெய்யியல் அறம் என்ற தலைப்பில் ந.கிருஷ்ணன் பேசினாா். பொருளாளா் சு.சண்முகவேலன் நன்றி கூறினாா்.