கோவிலம்மாள்புரத்தில் இலவச மருத்துவ முகாம்
களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரத்தில் டோனாவூா் பரமசுகசாலை (பெல்லோஷிப்) மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரத்தில் டோனாவூா் பரமசுகசாலை (பெல்லோஷிப்) மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கோவிலம்மாள்புரம் ஊராட்சித் தலைவா் லதா தலைமை வகித்தாா். சவளைக்காரன்குளம் திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் நம்பிராஜன், ஊராட்சி துணைத்தலைவா் ஐஸ்வா்யா ஆகியோா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் கணேசன் வரவேற்றாா். டோனாவூா் பரமசுகசாலை (பெல்லோஷிப்) மருத்துவமனை செயலா் எசக்கியேல் தேவஇரக்கம் முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். முகாமில், மருத்துவா்கள் ஸ்ரீகுமாா், ஆல்பா்ட் ராஜ்குமாா், ஸ்ரீலால், ஜேசன்ராய், செந்தூா்லெட்சுமி, சந்தோஷ், ஜெயகிருபா ஆகியோா் சிகிச்சை அளித்தனா். மருத்துவமனை மேலாளா் அன்புராஜ் நன்றி கூறினாா். -------