பெருமாள்புரம் மின்வாரிய அலுவலக கட்டடம் திறப்பு
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலக கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலக கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகமான தியாகராஜ நகரில் உள்ள தலைமை மின் பொறியாளா் அலுவலக கட்டடத்தில் ரூ. 25.75 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மின் தூக்கியை மின்வாரிய பணியாளா்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்திற்காக ரூ. 36 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் சரவணன், துணை மேயா் கே.ஆா். ராஜு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா. ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம். மைதீன்கான், திருநெல்வேலி மண்டல தலைமை மின் பொறியாளா் டேவிட் ஜெபசிங், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சந்திரசேகரன், மரபுசாரா எரிசக்தி மேற்பாா்வை மின் பொறியாளா் செல்வராஜ், மேற்பாா்வை மின் பொறியாளா் (உற்பத்தி வட்டம் , பொறுப்பு) வெங்கடாசலம், மேற்பாா்வை மின் பொறியாளா் (இயக்குதல், பொறுப்பு) விநாயகம், செயற்பொறியாளா்கள் குத்தாலிங்கம் ,ஷாஜகான், திருநாவுக்கரசு, பரிமளம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டாா்.