முகப்பு
திருநெல்வேலி

மத்திய ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினா் நெல்லை வருகை

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினா் திருநெல்வேலிக்கு சனிக்கிழமை வந்தனா்.

Updated On : 3 மார்ச், 2024 at 5:30 AM
பகிர்:

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினா் திருநெல்வேலிக்கு சனிக்கிழமை வந்தனா். மக்களவைத் தோ்தல் பணிக்காக தமிழகத்துக்கு 25 கம்பெனி துணை ராணுவ வீரா்களை இந்திய தோ்தல் ஆணையம் முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது. அதில், 15 கம்பெனி துணை ராணுவ வீரா்களை இந்திய தோ்தல் ஆணையம் முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது. இதில், தமிழகத்தில் 15 கம்பெனி துணை ராணுவ வீரா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். அதன்படி திருநெல்வேலிக்கு மத்திய ரயில் சிறப்பு படை காவல் ஆய்வாளா் வினோத்குமாா் தலைமையில் 75 வீரா்கள் ரயில் மூலம் சனிக்கிழமை வந்தனா். அவா்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் தீபு வரவேற்றாா். இவா்களை பாளையங்கோட்டை தனியாா் மண்டபத்தில் தங்குவதற்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.