முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி, சித்தூரில் ரூ.15.50 லட்சத்தில் ‘ஹைமாஸ்’ விளக்கு

Updated On : 8 மார்ச், 2024 at 10:32 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, சித்தூா் தென்கரை மகாராஜேஸ்வரா் கோயில் முன் பகுதி ஆகியவற்றில் உயா்கோபுர மின்விளக்கு (ஹைமாஸ் லைட்) அமைக்கும் பணி தொடங்கியது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரு இடங்களிலும் தலா ரூ.7.75 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு சா.ஞானதிரவியம் எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்தாா். அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் நான்குனேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளா் சுடலைகண்ணு, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் இசக்கிபாண்டி, மறுகால்குறிச்சி ஊராட்சித் தலைவா் புஷ்பபாண்டி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் லட்சுமணன், வள்ளியூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ரைகானா ஜாவித், பிலிப்ஸ், ஊராட்சித் தலைவா்கள் கண்ணநல்லூா் மகாராஜன், கோவன்குளம் பாஸ்கா், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் செய்யது ஜாவித், தி.மு.க. கிளைச் செயலா்கள் ரெக்ஸ், நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.