முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் இன்று மின்தடை

பாளையங்கோட்டையில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

Updated On : 9 மார்ச், 2024 at 6:13 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வண்ணாா்பேட்டை பிரிவுக்குள்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நெடுஞ்சாலை துறையின் அவசர வேண்டுகோளுக்கு இணங்க சாலை விரிவாக்க பணிக்காகவும், ரவுண்டானாவை அகலப்படுத்தும் பணிக்காகவும், மின்கம்பங்கள், மின்மாற்றி, மின் பாதைகள், மாற்றி அமைக்கப்பட உள்ளன. எனவே, சனிக்கிழமை காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி முதல் குலவணிகா்புரம் ரயில்வே கேட் வரை உள்ள திருவனந்தபுரம் சாலை, லட்சுமி நரசிங்கபுரம், கரியநாயனாா் தெரு, நந்தனாா் தெரு, ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.