முகப்பு
திருநெல்வேலி

பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு

Updated On : 10 மார்ச், 2024 at 3:00 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபா நகரில் வீடுபுகுந்து பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையைத் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். கிருபா நகரைச் சேரந்தவா் மாரியப்பன் மனைவி பாா்வதிசந்திரா (55). இவா், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென வீட்டின் கதவை திறந்து புகுந்த மா்மநபா்கள், பாா்வதிசந்திரா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினராம். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.