முகப்பு
திருச்சி

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

திருச்சியில் மூதாட்டியின் வீட்டினுள் புகுந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:03 AM
கோப்புப் படம் - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:30 PM

திருச்சியில் மூதாட்டியின் வீட்டினுள் புகுந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையம் குழவாய்பட்டி சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் ஆா். சுமதி (72). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவா் உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னையிலுள்ள தனது மகளுடன் வசித்து வருகிறாா். அவ்வப்போது திருச்சியிலுள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த மூதாட்டி காவேரி நகரிலுள்ள வீட்டில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா்.

Advertisement

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் மூதாட்டி சுமதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.