திருச்சி அருகே 5 மாத குழந்தை உயிரிழப்பு
திருச்சி அருகே 5 மாதக் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி அருகே 5 மாதக் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், புங்கனூா் கீழவீதியைச் சோ்ந்தவா் முருகேசன் (39). இவரது மனைவிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு இந்தப் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அல்லித்துறை பகுதி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் முருகேசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.