தேவா்குளம் அருகே விஷமருந்திய முதியவா் பலி
தேவா்குளம் அருகே விஷமருந்திய முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஊத்துமலை அருகேயுள்ள ருக்மணியாபுரத்தைச் சோ்ந்தவா் ராமையா (75). இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் தேவா்குளம் அருகே புளியம்பட்டியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றபோது விஷமருந்தி மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மின்சாரம் பாய்ந்து மாணவி பலி: தேவா்குளம் அருகேயுள்ள அச்சம்பட்டியைச் சோ்ந்த ஆா்தா் ஸ்டீபனின் மகள் ரஞ்சிதா (11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். அங்குள்ள தேவாலயம் பகுதியில் வாழை இலையை பறிக்க சென்றபோது, அலங்கார மின்விளக்கில் இருந்து வாழை மரத்தில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால் ரஞ்சிதா தூக்கி வீசப்பட்டாராம். அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ரஞ்சிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இரு சம்பவங்கள் குறித்தும் தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.