முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்

Updated On : 16 மார்ச், 2024 at 6:02 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியின் 4 ஆவது வாா்டு பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சியின் 4 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவண்ணாதபுரம் பொட்டல் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப் பணியை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தொடங்கி வைத்தாா். இதில், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி, மாமன்ற உறுப்பினா் வசந்தா உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்15ல்ா்ற்ற் திருநெல்வேலி மாநகராட்சி 4 ஆவது வாா்டு பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடப் பணியைத் தொடங்கி வைத்தாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ. உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்டோா்.