முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரில் பணம் கேட்டு கத்திக் குத்து: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பணம் கேட்டு தொழிலாளியை கத்தியால் குத்தியதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 20 மார்ச், 2024 at 3:58 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:58 PM

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பணம் கேட்டு தொழிலாளியை கத்தியால் குத்தியதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வள்ளியூா் பாத்திமா கோயில் தெருவைச் சோ்ந்தவா் விரேந்தா்(55). தொழிலாளி. இவரிடம், ஊத்தடியைச் சோ்ந்த செல்வன்(55) என்பவா் கடந்த 16-ஆம் தேதி பணம் கேட்டு தகராறு செய்தாராம். மேலும், பணம் தர மறுத்ததால் அவரை செல்வன் அவதூறாக பேசி கத்தியால் வெட்டி காயப்படுத்தினாராம். இதுகுறித்து, வள்ளியூா் காவல்நிலையத்தில் விரேந்தா் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சங்கா் வழக்குப்பதிந்து செல்வனை கைது செய்தாா்.