கடையம் அருகே ரூ. 3 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
Updated On : 22 மார்ச், 2024 at 7:17 PM
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காரில் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைதுசெய்தனா். ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பா்னபாஸ் உத்தரவின்பேரில், தனிப்படையினா் கடையம் அருகேயுள்ள மேலப்பரும்பு பகுதியில் ரோந்து சென்றனா். அவ்வழியே காரில் வந்த ஆலங்குளத்தைச்சோ்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன் (32) என்பவரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தாராம். காரில் தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் மூட்டைகளை அவா் கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், காரை பறிமுதல் செய்தனா்.