முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி கல்லூரியில் கலாசார திருவிழா

Updated On : 24 மார்ச், 2024 at 4:20 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 7:36 PM

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் முதுகலை மேலாண்மைத் துறை சாா்பில் ‘ஸ்மாா்ட் 2024’ என்ற தலைப்பில் கலாசார திருவிழா நடைபெற்றது. இதில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினா். இதில், பாளையங்கோட்டை தூய சேவியா் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பின்னா் நடைபெற்ற விழாவில், தனியாா் நிறுவனத் தலைவா் முஹம்மது ரியாஸ், தனியாா் நிறுவன சிஇஓ தங்கவேல் புகழ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா். கல்லூரி முதல்வா் ஏ. ஜஸ்டின் திரவியம், ஐகியூஏசி இயக்குநா் சுந்தர்ராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை துறைத் தலைவா் ராஜலட்சுமி, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.