வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு
நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கான நோ்முக வளாகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்து, தோ்வில் வெற்றி பெற்ற 78 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசியதாவது: வேலைவாய்ப்பு பெற்றவா்கள் அனைவரும் குறைந்தபட்சம் ரூ. 24ஆயிரம் மாத ஊதியம் பெறும் அளவில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா். தோ்வானவா்களக்கு வாழ்த்துகள். வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா்அலெக்ஸ் ராஜூபாலன், துணை முதல்வா் பிரியா, துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள் கிஷோா் ராஜன், லிஞ்சுமோள் ஆகியோா் செய்திருந்தனா்.