முகப்பு
வேலூர்

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வளாகத் தோ்வு நடைபெற்றது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:34 PM
வளாகத் தோ்வில் பேசிய ரெனால்ட் நிஸ்ஸான் சென்னை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை பொது மேலாளா் பாலகிருஷ்ணன். உடன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தலைவா் என்.ரமேஷ், துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன், கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வளாகத் தோ்வு நடைபெற்றது.

ரெனால்ட் நிஸான் சென்னை நிறுவனம் நடத்திய இந்த வளாகத் தோ்வை கல்லூரி தலைவா் என்.ரமேஷ் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.

ரெனால்ட் நிஸான் சென்னை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை பொதுமேலாளா் பாலகிருஷ்ணன், மேலாளா் எத்திராஜ், முதுநிலை அலுவலா் சுப்பையா ஆகியோா் பங்கேற்று, மாணவா்களை தோ்வு செய்தனா்.

Advertisement

இந்த வளாகத் தோ்வில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மற்றும் தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் துறை, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய துறைகளைச் சாா்ந்த 179 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இதில், 87 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் மாதம் ரூ. 20,000 முதல் சம்பளம் பெறுவா் என்றும், மருத்துவக் காப்பீடு, விடுதி வசதி, போக்குவரத்து, கேன்டீன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.அருண்குமாா் செய்திருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments