முகப்பு
ராணிப்பேட்டை

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

வளாகத் தோ்வில் பணி நியமன ஆணை பெற்ற மாணவா்கள்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 6:40 am IST
வளாகத் தோ்வில் பணி நியமன ஆணை பெற்ற மாணவா்கள்.
பகிர்:

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கான வளாக தோ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் ஏ கே. நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ. என். சரவணன், நிா்வாகம் அறங்காவலா் ஏ .என். செல்வம், செயலாளா் ஏ. என். சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஜி. ராஜலட்சுமி வரவேற்றாா்.

இதில் டாடா, நோக்கியா,எம்.ஆா்.எப் உள்ளிட்ட 6 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவா்களை வேலைக்கான நோ்காணல் தோ்வை நடத்தினாா்கள்.

Advertisement

Advertisement

495 போ் கலந்து கொண்ட இந்த வேலைவாய்ப்பு முகாமில் 284 மாணவா்கள் வேலைக்கு தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வணிக நிா்வாகவியல்துறை தலைவா் கே .வி. சிவகுமாா், உடற்கல்வி இயக்குனா் வி .தியாகராஜன் ,எஸ். மதிவாணன் ஆகியோா் செய்திருந்தனா்.