நெல்லையில் இதுவரை ரூ.5 லட்சம் பறிமுதல்
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பறக்கும் படையினா், நிலையான குழுவினா் மேற்கொண்ட சோதனையில் சனிக்கிழமை மாலை வரை ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 283 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தோ்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தனிநபா் ஒருவா் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால், அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்தல் பறக்கும் படையினா், நிலையான குழுவினா் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்டது முதல் சனிக்கிழமை மாலை வரையில் ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 283 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.