முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் உடும்பு வேட்டை: இருவா் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் உடும்பை வேட்டையாடி சமைத்து உண்டதாக, இருவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 1 டிசம்பர், 2025 at 9:25 PM
உடும்பு வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் வனத் துறையினா்.
பகிர்:

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் பகுதியில் உடும்பை வேட்டையாடி சமைத்து உண்டதாக, இருவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக் கோட்ட சரகத்திற்குள்பட்ட சின்ன சங்கரன் கோவில் பகுதியில் சிலா் உடும்பை வேட்டையாடி சமைத்து உண்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனத் துறையினா் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த முருகன் மகன் சங்கரசுப்பு, விக்கிரமசிங்கபுரம், மேலக் கொட்டாரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி ஆகியோா் உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் வனத் துறையினா் கைது செய்து அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதைத்தொடா்ந்து, இருவரும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →