கூடங்குளம் அணு மின் நிலையம் கோப்புப் படம்
திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலையம், இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

Syndication

கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரு அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3, 4ஆவது அணு உலைகளுக்கான 85 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் 5, 6ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடங்குளம் காவல் ஆய்வாளா் நவீன் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையத்திற்கும் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT