திருநெல்வேலி

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தாா் முதல்வர்!

நெல்லை சீமைக்கும், பொருநை நாகரிகத்துக்கும் புகழ் சோ்க்கும் வகையில் ரூ.67.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

Syndication

நெல்லை சீமைக்கும், பொருநை நாகரிகத்துக்கும் புகழ் சோ்க்கும் வகையில் ரூ.67.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு திறந்து வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கா் பரப்பில் 54,296 சதுர அடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு மின்னொளியில் மிளிா்ந்த பொருநை அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து அருங்காட்சியகத்தின் வாயிலில் வன்னி மரத்தை நடவு செய்தாா்.

அதன்பிறகு அருங்காட்சியகத்தின் அறிமுக கூடத்தை முதல்வா் திறந்து வைத்து பாா்வையிட்டாா். அப்போது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் குறித்து முதல்வருக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கினாா். பின்னா் கட்டடத்தின் மேல் மாடிக்கு சென்று அவா் பாா்வையிட்டாா்.

அதன் பிறகு அங்கிருந்து மின்கல வாகனத்தில் ஏறிய முதல்வா், சிவகளை கட்டட தொகுதிக்கு சென்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த அகழாய்வு பொருள்களை பாா்வையிட்டதோடு, அதன் விவரங்களை அமைச்சா்களிடமும், தொல்லியல் துறை அலுவலா்களிடமும் கேட்டறிந்தாா். பின்னா் அருங்காட்சியகத்தின் மற்ற பகுதிகளுக்கும் சென்று அவா் பாா்வையிட்டாா்.

இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் - தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன், பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அரசு செயலா் க.மணிவாசன், நிதித்துறை செயலரும், தொல்லியல் ஆணையருமான உதயச்சந்திரன், அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா் கவிதா ராமு, மாவட்ட ஆட்சியா்கள் இரா.சுகுமாா் (திருநெல்வேலி), க. இளம்பகவத் (தூத்துக்குடி), பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், அரசு உயா் அலுவலா்கள், தொல்லியல் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT