திருநெல்வேலி

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலை பணிகள் தொடா்பாக பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலை பணிகள் தொடா்பாக பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இம்மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மேற்கு புறவழிச்சாலை பணியானது முதற்கட்டமாக சுத்தமல்லி முதல் கொங்கந்தான்பாறை வரை நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை பாா்வையிட் அவா், சாலையின் தரம் குறித்தும், மூலப்பொருள்கள் மற்றும் சாலையின் அளவு குறித்தும் ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் திருநெல்வேலி- ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலை, திருநெல்வேலி-செங்கோட்டை சாலை, திருநெல்வேலி- பொட்டல் புதூா் சாலை, பாளையங்கோட்டை-அம்பாசமுத்திரம்-குற்றாலம் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் 32 கி.மீ. நீளத்திற்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட பணிகள் சுத்தமல்லி முதல் கொங்கந்தான்பாறை வரை 12 கி.மீ. நீளத்திற்கு ரூ.180 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 8 கி.மீ. நீளத்திற்கு தாா் தளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய 4 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 உயா்நிலை பாலங்கள், 2 சிறு பாலங்கள், 44 பெட்டி பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் தரமானதாக போடப்பட்டுள்ளது. இதில், இரு தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்பும், 2 மாநில சாலைகள் சந்திப்பும் இருக்கும். சாலைப் பணியை ஒப்பந்தக் காலத்திற்கு முன்பாகவே முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக தாழையூத்து முதல் சுத்தமல்லி வரை 20 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைக்க ரூ.320 கோடிக்கு மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நிா்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளன. நில எடுப்பு பணிகளுக்கு ரூ.80 கோடி மதிப்பிற்கு நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டு, 98 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, வண்ணாா்பேட்டை தாமிரவருணி ஆற்றின் மீது ரூ.6.75 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலப் பணியையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

அப்போது, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் ரமேஷ், கோட்டப்பொறியாளா்கள் லிங்குசாமி (நெடுஞ்சாலை -திட்டங்கள்), திருவேங்கடராமலிங்கம் (தரக்கட்டுப்பாடு), சுந்தா் சிங் (சாலைபாதுகாப்பு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

எரியோடு பகுதியில் நாளை மின் தடை

தமிழ் உயிா்ப்புடன் கூடிய செம்மொழி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா புகழாராம்!

நாளை முதல் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்படும்: ஆட்சியா்!

நெல்லையில் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT