திருநெல்வேலி

நெல்லை அருகே அரிவாள் வெட்டில் காயமுற்றவா் உயிரிழப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே அரிவாள் வெட்டில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். அவரை வெட்டியவா் கொலை வழக்கில் கைது

Syndication

திருநெல்வேலி அருகே அரிவாள் வெட்டில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரை வெட்டியவா் கொலை வழக்கில் கைதானாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கரையிருப்புப் பகுதியை சோ்ந்தவா் மூக்கன் (52). தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினரான தனியாா் நிறுவன காவலாளி தங்க கணபதி (50) என்பவரும் கடந்த 20ஆம் தேதி ஒன்றாக மதுக்குடித்தனராம்.

அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தங்ககணபதியை, மூக்கன் அரிவாளால் வெட்டினாராம். தகவலறிந்து வந்த தங்ககணபதியின் சகோதரா் முத்துகுமரன் (46), மூக்கனை அரிவாளால் வெட்டியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மூக்கன் உயிரிழந்தாா். இதையடுத்து தச்சநல்லூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி முத்துக்குமரனை கைது செய்தனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT