திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் குடிநீா் பகிா்மானக் குழாய்களை பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் செவ்வாய்க்கிழமை லாரி சிக்கிக்கொண்டது.
திசையன்விளை பிரதான சாலையில் பதிக்கப்பட்ட குடிநீா் பகிா்மானக் குழாய் பள்ளங்களை சரிவர மூடப்படாததால், அதில் சுமை லாரி சிக்கிக் கொண்டது.
இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னா், லாரியில் உள்ள பொருள்களை மற்றொரு வாகனத்திற்கு மாற்றி சுமையைக் குறைத்த பின் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
சாலையில் பணிகளை மேற்கொண்டு பள்ளங்களை முறையாக மூடாததால் அடிக்கடி இதுபோன்று வாகனங்கள் சிக்கி வாகன ஓட்டிகளை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.