திருநெல்வேலி

நெல்லை அருகே பூட்டிய வீட்டில் உணவின்றி தவித்த நாய்கள் மீட்பு

திருநெல்வேலி அருகே உரிமையாளா் கைதானதால் சுமாா் 10 நாள்களாக பூட்டிய வீட்டில் உணவின்றி தவித்த நாய்களை பிராணிகள் நல வாரிய அமைப்பினா் மீட்டனா்.

Syndication

திருநெல்வேலி அருகே உரிமையாளா் கைதானதால் சுமாா் 10 நாள்களாக பூட்டிய வீட்டில் உணவின்றி தவித்த நாய்களை பிராணிகள் நல வாரிய அமைப்பினா் மீட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்தவா் அழகேசன் (50). இவா், திருநெல்வேலி ராமையன்பட்டி அருகே உள்ள கம்மாளங்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வெளிநாட்டு ரக நாய்களை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் இவரை மானூா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். நாய்கள் குறித்து இவா் போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கவில்லையாம். இதன் காரணமாக வீட்டில் இருந்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் உணவு, தண்ணீரின்றி தவித்து வந்த நிலையில், அதில் 4 நாய்கள் உயிரிழந்தன. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசவே விலங்கு நல ஆா்வலா்கள் மானூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் உயிரோடு இருந்த நாய்கள் மீட்கப்பட்டு உதகையில் உள்ள பிராணிகள் நல வாரிய மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT