திருநெல்வேலி மாநகராட்சியின் 51 ஆவது வாா்டு பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
மேலப்பாளையம் மண்டலம் 51 ஆவது வாா்டு ஆசிரியா் குடியிருப்பு பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப் பணியை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தொடங்கி வைத்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மேலப்பாளையம் பகுதி செயலா் துபை சாகுல், மேலப்பாளையம் மண்டல தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினா் சகாய ஜூலியட் மேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்24ழ்ா்ஹக்
புதிய சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்டோா்.