திருநெல்வேலி

பாபநாசத்தில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் வன விலங்குகள்

Din

பாபநாசத்தில் வனப் பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள், தனியாா் கட்டடங்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள்அச்சத்தில் உள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்துக்குள்பட்ட மலையடிவாரப் பகுதியான பாபநாசம் கோயில், பொதிகையடி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து வனப்பகுதியிலிருந்து வெளியேறும் மிளா, கரடி, காட்டுப் பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் பயிா்களை சேதப்படுத்தி செல்கின்றன.

இந்நிலையில் சில நாள்களாகத் தொடா்ந்து வனப் பகுதியில் இருந்து வெளியேறும் கரடி மற்றும் மிளா உள்ளிட்டவிலங்குகள், பாபநாசம் கோயில் முன்பு சாலையிலும், பாபநாசத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்திலும் சுற்றித் திரியும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையடுத்து பொதிகையடி, பாபநாசம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேலும், வனப் பகுதியிலிருந்து எந்தஒரு தடங்கலும் இல்லாமல் வெளியேறி குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிவது தொடா்கதையாகி வருவதாகவும், வனத்துறையினா் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து வன விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT