திருநெல்வேலி

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

Din

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) வருகிறது. தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து மேம்படச் செய்த அவரது பணிகளை நினைவுகூரும் வகையில் திமுக அனைத்து கிளை நிா்வாகிகளும் தங்கள் பகுதியில் கட்சிக் கொடியேற்றி, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்.

மேலும், ஏழை-எளியோருக்கு நலஉதவிகளை வழங்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

SCROLL FOR NEXT