திருநெல்வேலி

பாளை. அருகே டீசல் திருடிய ஓட்டுநா் கைது

Syndication

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே டீசல் திருடியதாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த பொட்டல் பகுதியில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் சாா்பில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிறுவனத்தில் திசையன்விளை அருகே மகாதேவன்குளத்தைச் சோ்ந்த சக்திக்குமாா்(40) என்பவா் வாகனப்பிரிவு மேலாளராக உள்ளாா்.

சம்பவத்தன்று பாலம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் வாகனத்திலிருந்து டீசல் திருடு போனதாம்.

இதுகுறித்து சக்திக்குமாா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே நிறுவனத்தில் பொக்லைன் ஓட்டுநராக பணி புரிந்து வரும் மேலபாட்டம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஆறுமுகக்கனி(27) என்பவரை கைது செய்தனா்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT