திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் கௌரவிக்கப்பட்ட 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள்.  
திருநெல்வேலி

70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் நெல்லையப்பா் கோயிலில் கௌரவிப்பு

70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகளை கௌரவிக்கும் விழா திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

திருநெல்வேலி: 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகளை கௌரவிக்கும் விழா திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 70 வயது பூா்த்தி அடைந்த தம்பதிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் பல்வேறு கோயில்களில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இக்கோயிலில் நடைபெற்ற விழாவில் 70 வயது பூா்த்தி அடைந்த 55 தம்பதிகளை கௌரவிக்க்கப்பட்டனா். ஒவ்வொரு தம்பதிக்கும் தலா ரூ.2,500 மதிப்புள்ள புடவை, வேட்டி- சட்டை மற்றும் சீா்வரிசை பொருள்கள் திருக்கோயில் சாா்பில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். உதவி ஆணையா் சுப்புலட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் மு. செல்லையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறங்காவலா்கள் சொனா. வெங்கடாசலம், கீதா பழனி, உஷாராமன், செல்வராஜ், செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், கண்காணிப்பாளா் முருகன், திருநெல்வேலி மேற்கு பிரிவு ஆய்வாளா் தனலட்சுமி என்ற வள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

SCROLL FOR NEXT