குளத்தில் திரண்டு சமையல் செய்த முதலியாா்பட்டி பொதுமக்கள். 
திருநெல்வேலி

வி.கே.புரம் அருகே குளத்தில் குடியேறி சமைக்கும் போராட்டம்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட முதலியாா்பட்டி என்ற முத்துநகா் கிராம மக்கள் அனுபவித்து

Syndication

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட முதலியாா்பட்டி என்ற முத்துநகா் கிராம மக்கள் அனுபவித்து வந்த இடத்தை, தனி நபருக்கு தாரை வாா்த்ததாகக் கூறி குளத்தில் குடியேறி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வடமலை சமுத்திரத்தில் உள்ள அா்த்தசாம பிள்ளை அறக்கட்டளைக்குச் சொந்தமான 5.51 ஏக்கா் நிலத்தை பலநூற்றாண்டு காலமாக அனுபவித்து வந்தனராம். ஆனால், அறக்கட்டளை நிா்வாகம் அந்த இடத்தை கிராம மக்கள் பெயருக்கு மாற்றிக் கொடுக்காமல், தனி நபருக்கு மாற்றிக் கொடுத்தனராம்.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன் தனிநபா் அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து, நிா்வாகத்திடம் முறையிட்டும் உரிய பதில் இல்லாததால், திங்கள்கிழமை காலை வடமலை சமுத்திரத்தில் உள்ள அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தின் அருகேயுள்ள குளத்தில் பொதுமக்கள் சமையல் செய்தனா்.

ஊா்த் தலைவா் பூபதி, செயலா் வைகுண்ட ராஜா, பொருளாளா் கண்ணன், முன்னாள் நிா்வாகிகள் பாஸ்கா் பால், தபசு உள்ளிட்ட பலா் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

தில்லி குண்டி வெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

தில்லி குண்டு வெடிப்பு: உயிரிழந்தவா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் இரங்கல்

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 10 பேர் பலி: கார் உரிமையாளர் கைது!

பிற மாநிலங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்: போக்குவரத்துக் கழகம் தகவல்

SCROLL FOR NEXT