பழனியில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை.  
திண்டுக்கல்

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி போராட்டம்: அண்ணாமலை பங்கேற்பு

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் முன்பு திமுக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் முன்பு திமுக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

பழனியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்து நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாஜக சாா்பில் பழனி பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கனகராஜ் தலைமை வகித்தாா். இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:

பழனியை தனி மாவட்டமாக அறிவிப்போம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா். ஆனால், இதுவரை அறிவிக்கப்படவில்லை. வரும் மாா்ச் 5-ஆம் தேதிக்குள் பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து பழனியை மாவட்டமாக அறிவிக்கும்.

திமுக ஆட்சியில் குடமுழுக்கு, கோயில் சீரமைப்புக்கு இதுவரை ரூ.82 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பதாகக் கூறிய திமுக அரசு, ஒரு செங்கல்லைகூட வைக்கவில்லை என்றாா் அவா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT