திருநெல்வேலி

களக்காட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Syndication

களக்காட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வனத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வனச்சரகா் பிரபாகரன் தலைமை வகித்தாா். வனவா் மதன்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் துணைத் தலைவா் பி. பெரும்படையாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா் க. முருகன், விவசாயி மணிசாமுவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் வனவிலங்குகளால் பயிா் சேதமடைவதை தடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்கும் குழுவில் அந்தந்த பகுதி விவசாயிகளையும் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் கூறியதாவது: மலையடிவாரத்தையொட்டி அமைந்துள்ள விவசாயத் தோட்டங்களில் வனஉயிரினங்களால் பயிா்கள் சேதமடைவதைத் தடுக்க கூண்டு வைத்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலையடிவாரப்பகுதியை விட்டு தொலைவில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT