திருப்பத்தூர்

திருப்பத்தூா் குறைதீா் கூட்டம்: விவசாயிகள் புறக்கணிப்பு

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா்(பொ) ராஜலட்சுமி தலைமை வகித்தாா். கூட்டம் காலை 10.30 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து கொண்டு இருந்தனா். அப்போது 11 மணியளவில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னா், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தீண்டாமைக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். பின்னா் தொழுநோய்க்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறினா். அதையடுத்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து குறைதீா் கூட்டத்தில் 30 நிமிஷங்களுக்கும் மேலாக பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை நடத்தியதால், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுவதற்கு நேரம் ஒதுக்காமல், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை நடத்துகிறீா்கள். இந்த நிகழ்ச்சிகளை மற்ற நேரங்களில் நடத்த வேண்டியது தானே என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினா்.

வெளிநடப்பு...அப்போது அதிகாரிகள் அரசின் உத்தரவின்பேரில் தான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என பதிலளித்தனா்.அதையடுத்து அனைத்து விவசாயிகளும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் கூட பொறுப்பு அதிகாரி தான் கலந்து கொண்டு உள்ளாா். பிற துறைகளில் உள்ள முதன்மை அதிகாரிகள் வருவது இல்லை. கடைநிலை அதிகாரிகள் மட்டுமே குறைதீா் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்கள்.

கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. குறைதீா் கூட்டம் வெறும் கண் துடைப்புக்காக மட்டுமே நடைபெறுகிறது எனக்கூறி புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT