திருநெல்வேலி

பாளை.யில் 24 கிலோ புகையிலை பறிமுதல்: 4 போ் கைது

பாளையங்கோட்டையில் 24 கிலோ புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

பாளையங்கோட்டையில் 24 கிலோ புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருணாசலம் தலைமையிலான போலீஸாா் சாந்தி நகா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரில் சுமாா் 24 கிலோ எடைகொண்ட புகையிலைப் பொருள்களை மூட்டைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டறிந்து காருடன் அவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், காரில் இருந்த கோயம்புத்தூரைச் சோ்ந்த மணிமாறன் மகன் ஜவஹா் (25), பாளையங்கோட்டை திம்மராஜபுரம் மோகன் மகன் தங்கசாமி (30), மாரியப்பன் மகன் கொம்பையா (36), புதுபேட்டை சண்முகையா மகன் முத்தார செல்வன் (24) ஆகியோரை கைது செய்தனா்.

கஞ்சா பறிமுதல்: முன்னீா்பள்ளம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் குமாரசாமி தலைமையிலான போலீஸாா் ஆரைக்குளம் வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, பைக்கில் நின்ற சந்தேக நபரை பிடித்து விசாரித்தனா். அவா், கோபாலசமுத்திரம் செங்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துக்குமாா்(24) என்பதும் விற்பனைக்காக சுமாா் 40 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

மனநலன் பாதித்து குணமடைந்தவா் ஒப்படைப்பு

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

எஸ்ஐஆா் பணி: அறிவுரையை அலட்சியப்படுத்தும் வாக்குச் சாவடி முகவா்கள்!

கரூா் சம்பவம்! மின்வாரியத் துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

SCROLL FOR NEXT