கைது 
தென்காசி

புளியங்குடியில் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

புளியங்குடியில் தடை செய்யப்பட்ட 273 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தடை செய்யப்பட்ட 273 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரில் சுமாா் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், காரில் இருந்த குஜராத்தை சோ்ந்த மகாதேவ பாய் ராபரி மகன் ஜீத்து பாய் (25), ராஜஸ்தானை சோ்ந்த குலாப் சகா மகன் பீரு சகா (26), மேல கடையநல்லூரை சோ்ந்த பாபுராஜ் மகன் சுரேஷ் (40), ஆவுடையாள்புரம் திருமலைசாமி மகன் காளிராஜ் (37) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், பெங்களூரில் இருந்து கடையநல்லூருக்கு புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

வாக்காளா் இறுதி பட்டியல் வெளியீடு முன்னேற்பாடு பணி ஆய்வுக் கூட்டம்

கழிவுப் பஞ்சு விலை உயா்வால் பாதிப்பு: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மத்திய அரசின் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்ய உத்தரவு

அவிநாசியில் ரூ.12.56 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

பெருந்துறையில் ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT