தச்சநல்லூா் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூா் அருகே திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது தச்சநல்லூா் - தாழையூத்து சாலையில் உள்ள குளத்துக்கரை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த கங்கைகொண்டான், கலைஞா் காலனியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்வநாயகம் (51) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா் அவா் கையில் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக சுமாா் 29 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, செல்வநாயகத்தை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.