முகப்பு
திருப்பூர்

கஞ்சா வைத்திருந்த நபா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:45 AM
கைது
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:57 PM

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:45 AM

அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஜிதேந்திர மிஷால் (41) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா் 2.600 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.