திருநெல்வேலி

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை கேடிசி நகரிலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கும் நேரடியாக பேருந்து இயக்கக் கோரி, மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் , மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலா் சுதா்சன் மனு அளித்தாா்.

அதன் விவரம்: பாளையங்கோட்டை வட்டம், கீழநத்தம் ஊராட்சிக்குள்பட்ட கேடிசி நகா் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறாா்கள். இப்பகுதிக்கு கடந்த 15 ஆண்டுகளாக 3என்1, 3 என்2 ஆகிய எண்கள் கொண்ட இரு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது, அந்தப் பேருந்துகள் தினமும் இயக்கப்படுவதில்லை. அவற்றை தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கேடிசி நகரில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நேரடியாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மகர ராசியா நீங்க? தினப்பலன்கள்!

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT