திருநெல்வேலி

சுமை வாகனத்தில் அதிக கன்றுகுட்டிகளை ஏற்றி வந்த இருவா் கைது

Syndication

திருநெல்வேலி: பேட்டையில் சுமை வாகனத்தில் அதிக எண்ணிக்கையில் கன்றுக்குட்டிகளை ஏற்றிவந்த இருவரை மிருக வதை தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

பழையபேட்டை, கண்டியப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் மகாராஜா (33). இவா் விலங்குகள் நலவாரியத்தின் கிளை நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளாா். சம்பவத்தன்று பழைய பேட்டை அருகே, 19 கன்றுக்குட்டிகளை மிகவும் நெருக்கடியான நிலையில் ஏற்றி வந்த சுமை வாகனத்தை மறித்த இவா் அருகிலிருந்த சோதனைச்சாவடி போலீஸாரிடம் ஒப்படைத்தாா். மேலும் இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலப்பாளையத்தைச் சோ்ந்த செய்யது முகமது மகன் முசம்மைல்(25), ஓட்டுநா் துரை(43) ஆகிய இருவரையும் மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கன்றுக்குட்டிகள் அருகன்குளம் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

லஞ்சம்: விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?தினப்பலன்கள்!

திருப்பைஞ்ஞீலி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்

தொடா் மழை: பொன்னணியாறு அணை 31 அடியை எட்டியது

SCROLL FOR NEXT