திருநெல்வேலி: சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மகளிா் திட்டம் சாா்பில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் இரா.சுகுமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
‘புதிய உணா்வு - மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன் முன்னிலை வகித்தாா். பேரணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி, குறிச்சி வரை சென்று திரும்பியது. முன்னதாக, பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உதவி மகளிா் திட்ட அலுவலா்கள் ராதா, அனிதா, கண்காணிப்பாளா் காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்25ழ்ஹப்ப்ஹ்
ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைக்கிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.