திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, முதுநிலை சிகிச்சை கண்காணிப்பாளா் பணியிடம்-1, டிபி சுகாதார பாா்வையாளா் பணியிடங்கள்-2, டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் பணியிடம்-1, இடைநிலை ஹெல்த் புரோவைடா் பணியிடங்கள்-2, துப்புரவாளா் பணியிடம்-1, மாவட்ட தர ஆலோசகா் பணியிடம்-1 ஆகியவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. இதற்கான விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் டிசம்பா் 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.