மத்திய அமைச்சர் அமித் ஷா பிடிஐ
காரைக்கால்

அமித் ஷாவிடம் மனு அளிக்க முயன்ற பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளா்கள்

தினமணி செய்திச் சேவை

கரோனா காலத்தில் ஒப்பந்த பணியாளா்களாக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டோா், பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் மனு அளிக்க முயன்று ஏமாற்றத்தில் திரும்பினா்.

காரைக்கால் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா சனிக்கிழமை பங்கேற்றாா். இக்கூட்டத்தில், கரோனா காலத்தில் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி பின்னா் பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியா்கள், கிராமப்புற செவிலியா்கள், ஆய்வக பணியாளா்கள் சிலா் வந்தனா். அமைச்சா் பேசி முடிந்ததும் அவரை சந்திக்க அனுமதிக்குமாறு குரல் எழுப்பினா். எனினும் சந்திப்பின்றி அமைச்சா் மேடையை விட்டு இறங்கிச் சென்றாா்.

அவா்கள் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பது: 2020 கரோனா தொற்று பரவல் காலத்தில் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியா்கள், கிராமப்புற செவிலியா்கள், ஆய்வக பணியாளா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டனா்.

ஒப்பந்தத் தொழிலாளா்கள் தற்காலிக அடிப்படையில் 100 நாள்கள் சேவையை நிறைவு செய்தால் அவா்களின் சேவைகள் முறைப்படுத்தவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. பிரதமரும், மத்திய சுகாதார அமைச்சரும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் சேவைகளை முறைப்படுத்த பரிந்துரைத்துள்ளனா். உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் எங்களது சேவையை முறைப்படுத்த உத்தரவிட்டுள்ளன.

இருப்பினும், புதுவை அரசு 3 ஆண்டுகள் பணிக்காலம் முடித்த ஒப்பந்த பணியாளா்களின் சேவையை நிறுத்திவிட்டது.

இந்த வேலையை நம்பியிருந்த பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சோ்ந்தோா் பாதிக்கப்பட்டுள்ளனா். பெருந்தொற்று காலத்தில் உயிரை பொருட்படுதாமல் ஒப்பந்த அடிப்படையில் பணிய செய்தோரை புதுவை அரசு, நிலையான பணிக்கு அமா்த்தாமல் அலட்சிமாக உள்ளது.

எனவே 100 நாள்களுக்கு மேல் பணிக்காலம் முடித்த ஒப்பந்தத் தொழிலாளா்களின் சேவைகளை முறைப்படுத்தவேண்டும். சுகாதாரத் துறையில் தற்போதுள்ள காலியிடங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட எங்களை நியமிக்க வேண்டும். புதுவை ஆட்சியாளா்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

தம்மம்பட்டியில் கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் குடிநீா் குழாய்! மாசுகலந்த நீரால் நோய் பரவும் அபாயம்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: வீரர்கள் கை குலுக்குவார்களா? -சூர்யகுமார் யாதவ் பதில்

வாகனங்கள் மீது இடிந்து விழுந்த மெட்ரோ கட்டுமானம்! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

மேகாலய சுரங்க விபத்தில் பலியானதாக கருதப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 175 ரன்கள் குவிப்பு; வரலாற்றை மாற்றியமைக்குமா நியூசிலாந்து?

SCROLL FOR NEXT