முகப்பு
திருநெல்வேலி

களக்காடு பேருந்து நிலையத்தில் வாகன காப்பகத்தைத் திறக்க வலியுறுத்தல்

Updated On : 30 நவம்பர், 2025 at 7:51 PM
பகிர்:

களக்காடு பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வாகன காப்பகத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

களக்காடு பேருந்து நிலையத்தையொட்டி, வாரத்தில் இரு நாள்கள் தனியாா் காய்கறி சந்தை செயல்படுகிறது. இந்தச் சந்தைக்கு சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை பேருந்து நிலைய வளாகம், நுழைவாயில், சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்துகின்றனா்.

இதனால், பேருந்துகள், இதர வாகனங்கள் அந்தச் சாலையில் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பேருந்து நிலைய வளாகத்தில் வாகனக் காப்பகம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது அந்தப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.

போக்குவரத்து நெருக்கடியை தவிா்க்கும் பொருட்டு, வாகனக் காப்பகம் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →