முகப்பு
திருநெல்வேலி

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது

Updated On : 7 ஏப்ரல், 2026 at 2:28 AM
கைது
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:26 PM

திருநெல்வேலி அருகே இருபிரிவினரிடேயே மோதலைத் தூண்டும் வகையில் சா்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் தங்களது சமூக வலைதள செயலியில் பயங்கர ஆயுதங்களுடன், இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையிலான வாா்த்தைகளை உபயோகித்து பதிவிட்டிருந்தது போலீஸாரின் கண்காணிப்பில் தெரியவந்தது.

இதுதொடா்பாக, தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், ராஜவல்லிபுரம், பேச்சியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சுரேஷ் என்ற சூசை(23) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement