முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலியில் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 1:08 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த செல்லசாமி மகன் சுதாகா் (26).

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய இவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன்பேரில், சுதாகா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.